சூதாட்டச் சருக்கத்தில்
யுதிஷ்டிரன் வேடம் எனக்கு
சகுனி பகடையை உருட்டினான்
புத்தம் புதுப் படைக்கலங்கள் உருண்டன
இருபுறமும் படைகளை நகர்த்தி
ஆடியது அவன்
ஓவ்வொன்றாய் இழந்தவன்
நான்
வீடு வளவு
ஊர் உழைப்பு
உறவு சுற்றம்
இனம் நாடு எல்லாம்!
குளிருடை தரித்து
துருவம் புகுந்தேன்!
இனி என்ன?
என் மொழி, உழைப்பு
தனித்துவம் - எல்லாம் திருடப்படும்
என் வலி அறியாது!
முந்நூறு ஆண்டுகள் உழுதோம்
எங்கள் நிலத்தை அவர்க்கு
இனியும் உழுவோம்
அவர்கள் நிலத்தை அவர்க்கே
திருமாவளவன் (புலம்பெயர்ந்து வெளிநாடொன்றில் வாழும் கவிஞர்)
முந்நூறு ஆண்டுகள் உழுதோம்
பதிலளிநீக்குஎங்கள் நிலத்தை அவர்க்கு
இனியும் உழுவோம்
அவர்கள் நிலத்தை அவர்க்கே
நம் வரலாறு நாலுவரிகளில் முடிந்துபோயிற்று