ஞாயிறு, 13 பிப்ரவரி, 2011

என் காதல் சுகமானது - நித்தியா யோகராஜா

என் காதல் சுகமானது
கொள்ளைக்காதலின் வெள்ளை காதலியே!-
என் சொப்ன புரியின் சின்றல்லாவே!
என் அழகிய காதலின்
ரிசி முலம் –நதிமுலம் எல்லாம்
நீயே! நீயே! நீயே! தான்
என் இளமை வயலில்
அமுத மழையாய் வீழ்ந்த
நிகழ்கால அதிசயமே--உன்
கண்ணியமான காதலின்
தார்ப்பரியத்தால்- என்
இதய கட்டுக்களை அறுத்து
ககனத்தில் பறந்து
வாழ்வின் யதார்த்தங்களை
உழவு பார்க்கிறது
சாணக்கியனின் சாதுரியத்தோடு.
வாலிப வசீகரமே!
மாயாஜாலமும் மகேந்திர ஜாலமும் நிறைந்த
அதி அற்புத சஞ்சீவியான-உன்
காதல் கருவூலத்தினால்த்தான்
என் வாழ்க்9க தேரோட்டம்
வானவில் வர்ணங்கள் பூசி
வசந்த உலா போகிறது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக