ஞாயிறு, 18 டிசம்பர், 2011

ஓர் அலை பேசி உரையாடல்-----

ஆண்- தேசமெங்கும் தீயெரிந்த காலமதனில் கண்மணியே உனைவிட்டு நானும் பிரிந்தேன் பாசம்வைத்த உறவுகளின் உறவுகளின் உயர்வு எண்ணியே நேசம் வைத்த நின்நிழலை பிரிய துணிந்தேன்- நெஞசில் வைத்த ஆசைகளை கொஞசமொதுக்கி தஞ்சமென்று என்னை நம்பும் தங்கையர்காய் வாழ துணிந்தேன் பெண்-
உனைபிரிந்த நாள் முதலாய் என்னை வெறுத்தேன் கண்ணில் நீர் தேக்கி தினம் காவலிருந்தேன் ஒரு நாள் வருவீர் கைசேர்ந்து காதலுறுவேன் என்று ஒரு கனவினிலே உயிரை வளர்த்தேன் ஆண்- கொட்டும் பனி குளிருறையும் தேசமதனில் உன் நினைவு சூட்டினிலே உயிரை பிடித்தேன். என் கடமை தான் முடித்து வேலை நிறுத்தி என் இணையே உனை காண ஓடி வருவேன் நிலவிறங்கி வருகின்ற ஓர் மாலைப் பொழுதில் என்னவளே உன் அருகில் நானுமிருப்பேன்-

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக